Tamil Tamilvoice Danmark

சிறிலங்காவிற்கு `எதிரான´ தீர்மான வரைபை அமெரிக்கா முன்மொழிந்தது, தமிழீழ கோரிக்கைக்கும்! அனைத்துலக விசாரனைக்கும், ஆப்பு!
இறுதிப் போரின்போது நடைபெற்ற மீறல்களை  விசாரித்து அறிவதற்காக சிறிலங்கா அரசாங்கத்தினால்உருவாக்கப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தக் கோரும் பிரேரணைக்கான வரைபை அமெரிக்கா நேற்று மனித உரிமைச் சபைக்கு சமர்ப்பித்துள்ளது. சர்வதேச போர்க்குற்ற விசாரணைகளை தவிர்க்கும் நோக்குடன் மகிந்த அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்தரைகளை அமுல்ப்படுத்தக் கோருவதானது, சிறிலங்கா அரசாங்கத்தின் இராஜதந்திர நடவடிக்கைகளுக்கு கிடைத்த வெற்றியென அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.

Channal 4 தொடைக்காட்சி வெளியிட்ட போர்குற்ற ஆதாரங்கள் பொய் எனவும் ஜநா நிபுனர் குழுவால் வெளியிடப்பட்ட அறிக்கை பக்கசார்பானது எனவும் குற்றம் சாட்டிய சிறலங்கா அரசின் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை நடைமுறைப்படுத்துமாறே அமெரிக்காவின் தீர்மானம் வலியுறுத்துகின்றது.

புலத்து கதிர்காமர்களினால் வரவேற்கப்படும் இந்த தீர்மானம் தமிழீழ கோரிக்கைகும் ஆப்பு வைத்து சிங்களவர்களுக்கும் தமிழர்களுக்கும் இடையில் நல்லிணக்கம் ஏற்பட உதவுவதாகவும் கூறியுள்ளது.

சிறிலங்காவின் எதிர் கட்சியான அமெரிக்க சார்பு ஜக்கிய தேசிய கட்சி அமெரிக்காவின் தீர்மானம் சிறிலங்காவின்  சுயாதீனத் தன்மைக்கு குந்தகம் ஏற்படும் வகையில் அமையாது என சிங்கள மக்களுக்கு இன்று உறுதியளித்துள்ளது

நேற்று புதன்கிழமை (07-03-2012) அமெரிக்காவினால், மனித உரிமைச் சபைக்கு சமர்பிக்கப்பட்டுள்ள பிரேரணை வரைவானது, 47 அங்கத்துவ நாடுகளுக்கும், சபையினால் உத்தியோகபூர்வமாக வழங்கப்பட்டுள்ளது.

பிரேரணையின் உள்ளடக்க வரைவு தொடர்பிலான, அங்கத்துவ நாடுகளின் கருத்துக்களுடன், இந்தப் பிரேரணை சபையின் விவாதத்துக்கும், வாக்கெடுப்புக்கும் கொண்டு வரப்படும்.

அமெரிக்காவினால் சமர்பிக்கப்பட்டுள்ள பிரேரணையின் வரைவு

தீர்மான வரைபு:

சிறிலங்காவில் நல்லிணக்க மேம்பாடும் பொறுப்புக் கூறுதலும் (06-03-12)

ஐக்கிய நாடுகள் சாசனம், சர்வதேச மனித உரிமைகள் பிரகடனம், மனித உரிமைகளுக்கான அனைத்துலக உடன்படிக்கைகள் மற்றும் பிற தொடர்புடைய விதிகளுக்கு அமைவாக…

பயங்கரவாதத்திற்கு எதிராக எடுக்கப்படும் நடவடிக்கைகள் அனைத்தும் சர்வதேச விதிகளுக்கு அமைவாக இருப்பதை உறுதிப்படுத்தும் உறுப்பு நாடுகளது கடமைக்கு அமைவாகவும், குறிப்பாக பொருத்தமான சர்வதேச மனித உரிமைகள், பாதுகாப்பு, மனிதாபிமான விதிகளுக்கு அமைவாகவும்…

சிறிலங்காவின் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் (LLRC) அறிக்கையின் முடிவுகளையும் பரிந்துரைகளையும்

மற்றும் சிறிலங்காவில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதில் இவ்வறிக்கை வழங்கிய பங்களிப்பை ஏற்றும்,

சட்டத்திற்கு முரணாக மேற்கொள்ளப்பட்டதாக கருதப்படும் படுகொலைகள் மற்றும் காணாமற் போதல்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளையிட்டு பக்கசார்பற்ற விசாரணை மேற்கொள்ளுதல், வடக்கிலிருந்து இராணுவத்தை விலக்குதல், காணி தொடர்பான பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கான பாரபட்சமற்ற பொறிமுறையை உருவாக்குதல், தடுத்து வைத்தல் தொடர்பான கொள்கைகளை மீளாய்வு செய்தல், சுயாதீனமான சிவில் சமூக கட்டமைப்புகளை பலப்படுத்துதல்,மாகாணங்களுக்கு அதிகாரங்களைப் பரவலாக்குதல் மூலம் இனப்பிரச்சனைக்கான தீர்வைக் காணுதல், அனைவரதும் கருத்து வெளிப்பாட்டு உரிமைகளைப் பாதுகாத்தல் மற்றும் மேம்படுத்துதல், சட்ட ஆட்சி முறை தொடர்பான சீர்திருத்தங்களை மேற்கொள்ளுதல் போன்ற விடயங்கள் சார்ந்து கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு முன்வைத்துள்ள ஆக்கபூர்வமான பரிந்துரைகளை வரவேற்று,

சர்வதேச சட்ட விதிகள் தீவிரமாக மீறப்பட்டமை குறித்து கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு போதுமான அளவு கவனம் செலுத்தவில்லை என்பதையும் கவனத்திற்கொண்டு,

1. கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள ஆக்கபூர்வமான பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதுடன் நீதி, பொறுப்புப் கூறுதல், சகல இலங்கையர்க்கும் இடையிலான நல்லிணக்கம் போன்றவற்றை உறுதிப்படுத்த, பொருத்தமானதும் நம்பிக்கையானதுமான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கவும் சட்டரீதியான கடமைகளையும் பொறுப்புக்களையும் நிறைவேற்றவும் சிறிலங்கா அரசைக் கோருதல்

2. கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துதல் தொடர்பாக இதுவரை எடுக்கப்பட்ட மற்றும் தொடர்ந்து எடுக்கப்படவுள்ள விபரங்கள் உள்ளிட்ட, விரிவான செயற்திட்டத்தை விரைந்து முன்வைக்குமாறும், சர்வதேச சட்டவிதிகள் மீறப்பட்டமை குறித்த குற்றச்சாட்டுகள் குறித்து கவனம் செலுத்துமாறும் சிறிலங்கா அரசாங்கத்தைக் கோருதல்

3. மேற்சொன்ன திட்டங்களை நடைமுறைப்படுத்தவதற்குரிய ஆலோசனைகளையும் தொழில்நுட்ட உதவிகளையும் ஐ.நா மனித உரிமைகள் ஆணையகத்தை வழங்குமாறும் சிறிலங்கா அரசாங்கத்தை இதனை ஏற்றுக்கொள்ளுமாறும் வேண்டுவதுடன் இது தொடர்பாக மனித உரிமைகள் ஆணையகத்தின் 22 வது கூட்டத்தொடரில் வழங்கப்பட்ட உதவிகள் தொடர்பான அறிக்கையை சமர்ப்பிக்குமாறும் ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தை வேண்டுதல்

Draft Resolution: Promoting Reconciliation and Accountability in Sri Lanka (3/6/12)

Guided by the Charter of the United Nations, the Universal Declaration of Human Rights, the International Covenants on Human Rights, and other relevant instruments,

Reaffirming that States must ensure that any measure taken to combat terrorism complies with their obligations under international law, in particular international human rights, refugee and humanitarian law, as applicable,

Noting the Report of Sri Lanka’s Lessons Learnt and Reconciliation Commission (LLRC) and its findings and recommendations, and acknowledging its possible contribution to Sri Lanka’s national reconciliation process,

Welcoming the constructive recommendations contained in the LLRC report, including the need to credibly investigate widespread allegations of extra judicial killings and enforced disappearances, demilitarize the north of Sri Lanka, implement impartial land dispute resolution mechanisms, reevaluate detention policies, strengthen formerly independent civil institutions, reach a political settlement involving devolution of power to the provinces, promote and protect the right of freedom of expression for all, and enact rule of law reforms,

Noting with concern that the LLRC report does not adequately address serious allegations of violations of international law,

1. Calls on the Government of Sri Lanka to implement the constructive recommendations in the LLRC report and take all necessary additional steps to fulfill its relevant legal obligations and commitment to initiate credible and independent actions to ensure justice, equity, accountability and reconciliation for all Sri Lankans,

2. Requests that the Government of Sri Lanka present a comprehensive action plan as expeditiously as possible detailing the steps the Government has taken and will take to implement the LLRC recommendations and also to address alleged violations of international law,

3. Encourages the Office of the High Commissioner for Human Rights and relevant special procedures to provide, and the Government of Sri Lanka to accept, advice and technical assistance on implementing those steps and requests the Office of the High Commissioner for Human Rights to present a report to the Council on the provision of such assistance at its twenty-second session.

நாட்டின் சுயாதீனத் தன்மைக்கு குந்தகம் ஏற்படும் வகையிலும் தீர்மானம் அமையாது.-ஐக்கிய தேசியக் கட்சி
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் நிறைவேற்ற முயற்சிக்கப்படும் தீர்மானம் நாட்டுக்கு எதிரானதல்ல என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

நாட்டின் சுயாதீனத் தன்மைக்கு குந்தகம் ஏற்படும் வகையிலும் தீர்மானம் அமையாது.

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையின் பரிந்துரைகளை அமுல்படுத்துமாறு கோரிக்கை விடுக்கப்படுகின்றது.

பரிந்துரைகளை எவ்வாறு எப்போது அமுல்படுத்தப்படும் என்பதனை விளக்குமாறும், அதற்கு ஐக்கிய நாடுகள் அமைப்பின் தொழில்நுட்பசார் ஒத்துழைப்பு வழங்கப்படும் என்பதனை இலங்கைக்கு அறிவிக்கும் நோக்கில் தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது.

அரசாங்கம் மக்களை பிழையான வழியில் இட்டுச் செல்ல முயற்சிக்கின்றது.

அரசாங்கம் ஜனநாயக விரோத செயல்பாடுகளிலேயே அதிகளவில் ஈடுபட்டு வருகின்றது.

கடந்த காலங்களை விடவும் தற்போது நாட்டில் மனித உரிமை மீறல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.

உலக நாடுகள் இலங்கை தொடர்பில் கவனம் செலுத்துவதனை தவறாகக் கருதக் கூடாது.

அன்று சர்வதேச நாடுகள் இலங்கை விவகாரத்தில் தலையீடு செய்திருக்காவிட்டால் இன்று அமைச்சுப் பதவிகளை வகிக்கும் பலர் உயிருடனேயே இருந்திருக்க மாட்டார்கள்.

சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் ஜனாதிபதியை நிறுத்த முயற்சிப்பதாக செய்யப்படும் பிரச்சாரங்களில் உண்மையில்லை.

சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் தொடர்பிலான பிரகடனத்தில் இலங்கை கைச்சாத்திடவில்லை என மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

இலங்கைப் பிரமுகர்கள் வர தமிழக அரசிடம் அனுமதி பெறவேண்டும்! பிரதமருக்கு ஜெ. கடிதம்!!
தமிழக அரசிடம் ஆலோசனை கேட்காமல் இலங்கைப் பிரமுகர்களை தமிழகத்திற்குள் மத்திய அரசு அனுமதிக்கக் கூடாது. மேலும் இலங்கைப் பிரமுகர்கள் அடிக்கடி தமிழகம் வருவதையும் மத்திய அரசு ஊக்குவிக்கக் கூடாது என்று முதல்வர் ஜெயலலிதா, பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் பிரதமருக்கு அனுப்பியுள்ள கடிதம்:

இலங்கைத் தமிழர்கள் மற்றும் அவர்களின் உரிமைகள் தொடர்பாக இலங்கை அரசு நடந்து கொண்டு வரும் விதம் குறித்து தமிழக மக்கள் முழுமையாக அறிந்துள்ளனர்.

ஈழத் தமிழர்கள் கெளரவமாகவும், கண்ணியத்துடனும் வாழ இலங்கை அரசு வழி செய்யவில்லை என்பதே தமிழக மக்களின் ஒட்டுமொத்தக் கருத்தாகும். மேலும் சிங்களர்களுக்கு இணையான அந்தஸ்தை இலங்கை அரசு தமிழர்களுக்கு வழங்கவில்லை என்பதும் தமிழகத்தின் கருத்தாகும்.

இந்தப் பின்னணியில் இலங்கையைச் சேர்ந்த பல முக்கியப் பிரமுகர்கள், முக்கியஸ்தர்கள் தனிப்பட்ட பயணமாக, மாநில அரசுக்கு எந்தவிதத் தகவலையும் கூட தராமல் அடிக்கடி வந்து செல்ல ஆரம்பித்துள்ளனர்.

அப்படிப்பட்ட ஒரு வருகையின்போது ராஜபக்சேவின் மைத்துனர் திருக்குமரன் நடேசன் என்பவர், 9.1.2012 மற்றும் 10.1.2012 ஆகிய நாட்களில் ராமேஸ்வரம் வந்துள்ளார். அப்போது அவர் சிலரால் தாக்கப்பட்டுள்ளார்.

அவரது வருகை குறித்து இந்திய அரசிடமிருந்தோ, இலங்கை அரசிடமிருந்தோ எந்தவிதமான தகவலும் தெரிவிக்கப்படவில்லை. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எதையும் எடுக்க முடியவில்லை.

இந்த சம்பவம் தொடர்பாக தென்னிந்தியாவுக்கான இலங்கை துணைத் தூதர், தமிழக அரசின் தலைமைச் செயலாளருக்கும், மத்திய வெளியுறவுத்துறை இணைச் செயலாளரும் எழுதியுள்ள கடிதம் எனது பார்வைக்கு வந்தது. அந்த கடிதத்தின் தொணி, அதில் பிரயோகிக்கப்பட்டுள்ள வார்த்தைகள், தேவையில்லாதது, நியாயமற்றது, ஏற்றுக் கொள்ள முடியாதது.

இலங்கையைச் சேர்ந்த அரசு அதிகாரிகள், ராணுவ அதிகாரிகள், விஐபிக்கள் மாநில அரசுக்குத் தகவல் கொடுக்காமல் வந்தால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எதையும் எடுக்க முடியாது.

இதுதொடர்பாக மத்திய வெளியுறவு அமைச்சகத்திற்கும், உள்துறை அமைச்சகத்திற்கும் கடந்த 16.9.2011, 24.2.2012 ஆகிய நாட்களில் கடிதம் எழுதப்பட்டுள்ளது.

எனவே, தற்போதைய நிலையை கருத்தில் கொண்டு, இலங்கையைச் சேர்ந்தவர்கள் அடிக்கடி தமிழகம் வருவதை மத்திய அரசு ஊக்கம் தரக் கூடாது, ஊக்குவிக்கக் கூடாது என்று கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் முதல்வர் ஜெயலலிதா.

தமிழ்த் தலைமைகள் பங்கு வகிக்காத எந்தவொரு சர்வதேச அமர்வுகளும் தமிழர்களுக்குச் சாதகமாக மாறப் போவதில்லை – கஜேந்திரகுமார்
தமிழ்த் தலைமைகள் பங்கு வகிக்காத எந்தவொரு சர்வதேச அமர்வுகளும் தமிழர்களுக்குச் சாதகமாக மாறப் போவதில்லை என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

போரின் இரு தரப்பான ஒரு தரப்பின் போரின் விசாரணையை ஒப்படைக்கும் அமெரிக்காவின் தீர்மானம் எமக்குச் சாதகமானதல்ல. தமிழர் பெயரில் செய்யப்படும் ஒரு விடயம் தமிழருக்கு நன்மையளிக்காத விடத்து அதனை தமிழர் தரப்பும் தமிழர் தலைமையும் சுட்டிக்காட்டவேண்டும். அந்த மாநாட்டில் எங்கள் பங்கு வகிக்கப்படாத விடத்து ஜெனிவா மாநாடு எமக்குச் சாதகமாக மாறப் போவதில்லை. தமிழர்கள் பங்கெடுக்காதவரை அது இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுப்பதற்காக சர்வதேசத்திற்கு ஒரு கருவியாகவே மட்டுமே பயன்படும் என்றும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கூறினர்.

காலப்போக்கில் சர்வதேசம் மாற்றமடைந்து தமிழருக்கு சார்பாக ஒரு செயற்பாட்டில் இறங்குமாயின் – அது எவ்வாறு அமையவேண்டுமென்று இப்போதே தமிழர் தரப்பு சுட்டிக்காட்ட வேண்டும். சுட்டிக்காட்டுவதுடன் அதில் ஆணித்தரமாக தொடர்ந்து நிலைத்து நிற்கவேண்டும். இல்லையேல் மீண்டும் மீண்டும் எங்கள் விடயம் – எங்கள் நலன் சார்ந்ததாக சர்வதேசத்தால் பயன்படுத்தப்படமாட்டாது என்றும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கூறினர்.

ஆரம்பமாகியது உரிமைகோரல் போட்டி!! “அமெரிக்கா தீர்மானம் கொண்டுவரக் காரணம் நானே”-சுமந்திரன்
ஜெனிவா சென்று அனைத்துலக இராஜதந்திரிகளுக்கு மதிய விருந்தளிப்பதாலோ, வெறும் மூன்று நிமிட உரைக்காக பிறிதொரு மனிதஉரிமை அமைப்பை நாடி நிற்பதாலோ எமக்கு விடிவு கிடைத்து விடப் போவதில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

ஜெனிவா மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்திற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செல்லாதது குறித்து மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள குழப்ப நிலைகளுக்கு விடையளிப்பதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட உள்ளூராட்சி சபை உறுப்பினர்களுக்கு விளக்கம் அளிக்கும் கலந்துரையாடல் ஒன்று நேற்று நல்லூர் இளங்கலைஞர் மண்டபத்தில் இடம்பெற்றது.

இதில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,

“சிறிலங்காவில் எந்த ஒரு அரசியல் கட்சிக்கும் கிடைக்காத அங்கீகாரம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு கிடைத்திருக்கிறது.

இந்தியா முதல் அமெரிக்கா வரை அனைத்து நாடுகளும் தமிழ் தேசியக் கூட்டமைப்பை தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக ஏற்றுக் கொண்டன.

இந்த அங்கீகாரத்தின் மூலம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அழைத்து அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள அதிகாரிகள் கடந்த ஒக்டோபர் மாதம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அதில் கூட்டமைப்பு தமிழ் மக்களின் நிலைகள் குறித்து விளக்கியமையே இன்று சிறிலங்காவுக்கு எதிராக அமெரிக்கா தீர்மானம் கொண்டு வரக் காரணம். அதன் அடுத்த கட்டமாக கடந்த ஜனவரி மாதம் மூன்று நாட்கள் கனடாவுக்குச் சென்றிருந்தேன்.

அதன்போது ஒருநாள் வொஷிங்டன் சென்று அமெரிக்க இராஜதந்திரிகளுடன் கலந்துரையாடிய போது, தமிழ் மக்களுக்கு ஆதரவாக தீர்மானம் கொண்டு வரப்படும் என்ற நம்பிக்கையை இராஜதந்திரிகளில் ஒருவரான அம்மையார் ஒருவர் தெரிவித்திருந்தார்.

அதன்பின் சிறிலங்கா வந்த அமெரிக்காவின் இரு இராஜதந்திரிகளும் முதலில் சந்தித்தது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைத் தான்.

இவ்வாறு கூட்டமைப்பு மேற்கொண்ட இராஜதந்திர நடவடிக்கைகள் தான் சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானத்தை கொண்டு வரக் காரணமானது.

ஜெனிவா சென்று அனைத்துலக இராஜதந்திரிகளுக்கு மதிய விருந்தளிப்பதாலோ, வெறும் மூன்று நிமிட உரைக்காக பிறிதொரு மனித உரிமை அமைப்பை நாடி நிற்பதாலோ எமது விடிவு எம்மை அடையாது.

நாம் இங்கிருந்து கொண்டே அனைத்துலகத்தை உற்றுநோக்கிக் கொண்டிருக்கிறோம். இங்கிருந்தவாறே சிறிலங்கா அரசிற்கு எதிரான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருவோம்.“ என்று அவர் கூறியுள்ளார்.

இந்தக் கலந்துரையாடலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட உள்ளூராட்சி சபைகளின் உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா, சுமந்திரன், சிறிதரன் ஆகியோர் கூட்டமைப்பு சார்பில் கருத்துக்களை வெளியிட்டனர்.

ஏசியன் ரிபியுண் இராசசிங்கம் குற்ற வாளி! சுவீடன் சட்ட வரலாற்றில் அதிகூடிய மானநஷ்ட தண்டணை!!
தென்ஆபிரிக்க இறுதி வெள்ளை இனத்து ஜனாதிபதியும் ஆபிரக்காவின் தந்தை எனப்படும் நெல்சன் மண்டேலாவுடன் இணைந்து நொபல் பரிசு பெற்றவருமான டாக்ர்.கிளாக் அவர்களுடன் ஆசிய நாடு ஒன்றில் ஆய்வு ஒன்றில் நடராசா சேதுரூபன்

ஏசியன் ரிபியுண் இணையத்தள ஆசிரியர் கே.ரி.இராசசிங்கம் 20ஆயிரம் அமெரிக்க டொலர்களை நடராசா சேதுரூபனுக்கு (நோர்வே சேது) நஷ்டஈடாக வழங்க வேண்டும் எனவும் அவருக்கு ஏற்பட்ட கடந்தகால பண இழப்புக்களைப் பின்னர் கணிப்பிட்டு நட்டஈடாக செலுத்த வேண்டும் எனவும் சுவீடன் மேன்முறையீட்டு நீதிமன்றம் அந்நாட்டுச் சட்ட வரலாற்றில் அதிகூடிய தீர்ப்பு வழங்கியுள்ளது.

சுவீடன் நாட்டில் 1994ம் ஆண்டுக்கு முன்னார் சுவீடன் பிரதமருக்கு எதிராக வெளியான செய்தி தொடர்புடையச் செய்தித்தாள் ஒன்றுக்கே அதிக தண்டனையாக சுவீடன் நாட்டில் தீர்ப்பளிக்கபட்டிருந்த நிலையில் அதனைத் தாண்டி அதிக தண்டனை இலங்கை உளவுத்துறையின் சதியென கருதப்படும் வழக்கிற்கு வழங்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே சுவீடன் மாவட்ட நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து கே.ரி.இராசசிங்கம் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்திருந்தார்.

இதனை ஆராய்ந்த மேன்முறையீட்டு நீதிமன்றம் மாவட்ட நீதிமன்றம் ஏற்கனவே வழங்கிய தீர்ப்பை உறுதி செய்து கே.ரி.இராசசிங்கம் குற்றவாளி என்றும் நோர்வே நாட்டைச் சேர்ந்த ஊடகவியலாளர் சேதுரூபனுக்கு 20ஆயிரம் அமெரிக்க டொலர்களையும் 2005ஆம் ஆண்டு நவம்பர் மாதத்திலிருந்து அதற்கான வட்டியையும் அவருக்கு ஏற்பட்ட மேலதிக பண இழப்புக்களையும் செலுத்த வேண்டும் என்றும் சுவீடன் மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆசிய கற்கைகளுக்கான உலக நிறுவனம் என்ற நிறுவனமே ஏசியன் ரிபியுண் என்ற இணையத்தளத்தை நடத்தி வருகிறது.

இந்த இணையத்தளத்தின் தலைவராக கே.ரி.இராசசிங்கம், நிறைவேற்றுக்குழு உறுப்பினர்களாக எகெமினி எபிவோக், மகிந்தபால, தயாகமகே, கொடித்துவக்கு, பிலிப் பெர்னாண்டோ, சுமன லியனாராச்சி, லீல் பத்திரன ஆகிய பல பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக நோர்வேயில் உள்ள நடராசா சேதுரூபன் ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவிக்கையில்,

2003, 2004ஆம் ஆண்டு காலப் பகுதியில் கே.ரி.இராசசிங்கம் தன்னிடம் தொடர்பு கொண்டு நோர்வே அரசாங்கத்திற்கு எதிராகவும் இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக்குழுவுக்கு எதிராகவும் செயற்படுவோம் என கோரினார்.

நோர்வே அரசாங்கத்திற்கு எதிராகவோ நோர்வே அரசாங்கம் மேற்கொள்ளும் சமாதான முயற்சிகளுக்கு எதிராகவே தான் செயற்பட மாட்டேன் எனத் தான் மறுத்து விட்டதாகவும் சேதுரூபன் தெரிவித்துள்ளார். இதனால் கோபமடைந்த கே.ரி.இராசசிங்கம் தன்னை பயங்கரவாதி என்று எழுத ஆரம்பித்தார் எனத் தெரிவித்துள்ளார் சேதுரூபன்.

கே.ரி.இராசசிங்கம் ஏசியன் ரிபியுண் இணையத்தளத்தில் சேதுரூபனுக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் வகையில் செய்தி வெளியிட்டதால் சேதுரூபன் பாதிக்கப்பட்டிருந்தார் என்பது மேன்முறையீட்டு நீதிமன்றம் உறுதிப்படுத்தி இத்தீர்ப்பை வழங்குவதாக மேன்முறையீட்டு நீதிமன்றத் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நீதிமன்ற தீர்ப்பை ஏசியன் ரிபியுண் இணையத்தளத்தில் முன்பக்கத்தில் பிரசுரிக்க வேண்டும் என்றும் இலங்கையிலிருந்து வெளிவரும் பத்திரிகைகளிலும் பிரசுரிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கில் ஏசியன் ரிபியுண் இணையத்தளதிற்குச் சாட்சி சொல்வதற்காக இலங்கையில் இருந்து இராணுவ கொமாண்டோ அதிகாரி ஒருவர் வந்திருந்தமை குறிப்பிடதக்கது.

யாழ். பல்கலைக்கழகத்தில் சுமந்திரன் எம்.பியின் கொடும்பாவி.
தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனின் கொடும்பாவியொன்று யாழ். பல்கலைக்கழக வளவினுள் தூக்கில் தொங்கவிடப்பட்டிருக்கிறது. “தமிழின துரோகி சுமந்திரன்“ எனத்தெரிவிக்கப்பட்டிருந்த அக்கொடும்பாவியினில் தொங்க விடப்பட்டிருந்த சுலோக அட்டையினில் “போர் குற்ற விசாரணை எங்கே?“ எனக் கேள்வியும் கேட்கப்பட்டிருக்கிறது.

படையினரதும் பொலிஸாரினதும் பூரண கண்காணிப்பின் கீழ் வைக்கப்பட்டுள்ள யாழ். பல்கலைக்கழக வளவினுள் எவ்வாறு சுமந்திரனின் கொடும்பாவி எடுத்து வரப்பட்டிருக்கிறது என யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் தவபாலனிடம் கேட்டபோது, “இது பல்கலைக்கழக மாணவர்களினாலேயே இது நடந்திருக்கிறது என நம்புகிறோம்..” என்று தெரிவித்தார். இலகுவில் எடுக்கமுடியத விதத்தில் உயர்ந்த கட்டடத்தில் தொங்கவிடப்பட்டுள்ள இந்தக் கொடும்பாவி நேற்று இரவு தொங்கவிடப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது.

இதனிடையே கூட்டமைப்பினர் ஜெனிவாவிற்கு செல்வதில்லையென எடுக்கப்பட்ட முடிவை உடனடியாக மீள் பரிசோதனை செய்ய வேண்டுமென வலியுறுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பொன்றையும் இன்று காலை மாணவர் ஒன்றியம் ஏற்பாடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

ராஜபக்சவுக்கு எதிரான அமெரிக்க வழக்கு நிராகரிப்பு
சிறிலங்காவில் மூன்று வருடங்களுக்கு முன்னதாக முடிவுக்கு வந்த உள்நாட்டுப் போரில் சிறிலங்கா இராணுவத்தால் பலர் தொடர்ச்சியாக கொல்லப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு ஒன்றை அமெரிக்க நீதிமன்றம் ஒன்று நிராகரித்திருக்கிறது.

வெளிநாடு ஒன்றின் தலைவர் என்ற வகையில் ராஜபக்ச அவர்களுக்கு சட்ட விலக்கு இருப்பதாக அந்த வழக்கை விசாரித்த நீதிபதி தெரிவித்திருக்கிறார்.

எப்படியிருந்த போதிலும், இறுதிக்கட்ட போரில் நடந்ததாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்களை இந்த வழக்கு மீண்டும் ஒருமுறை கோடிட்டுக் காட்டியிருக்கிறது.

ராஜபக்சவுக்கு எதிரான இந்த வழக்கை, திருகோணமலையில் ஆறு வருடங்களுக்கு முன்னர் கடற்கரையில் சுட்டுக்கொல்லப்பட்ட மாணவர்களின் உறவினர்களும், மூதூரில் கொல்லப்பட்ட பிரஞ்சு தொண்டு நிறுவனத்தின் பணியாளர்களின் உறவினர்களும் தாக்கல் செய்திருக்கிறார்கள்.

இந்த இரு கொலைச் சம்பவங்கள் தொடர்பாகவும் எவர் மீதும் இதுவரை குற்றம் சுமத்தப்படவில்லை.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் கட்டுப்பாட்டில் இருந்த பாதுகாபுப் படையினரே இவர்களை கொன்றதாக வழக்காளிகள் கூறுகிறார்கள். ஆனால் அது குறித்த குற்றச்சாட்டை சிறிலங்கா அரசாங்கம் விடுதலைப்புலிகள் மீது போடுகிறது.

2009 இல் விடுதலைப்புலிகளை சிறிலங்கா இராணுவம் அழித்தபோது கொல்லப்பட்ட சிலரின் உறவினர்களும் இந்த வழக்கில் வழக்காளிகளாக கலந்து கொண்டிருந்தனர்.

அரசாங்கத்தால் தாக்குதல் சூனியப் பிரதேசமாக அறிவிக்கப்பட்ட பகுதியின் மீது கடற்படையினர் சுட்டபோது தமது உறவினர்கள் 4 பேர் கொல்லப்பட்டதாக அவர்கள் கூறுகிறார்கள்.

அமெரிக்க ஒபாமா நிர்வாகம், ராஜபக்ச அவர்கள் பதவியில் இருக்கும் வரை அவருக்கு சட்ட விலக்கு இருப்பதாக கூறுவதால், இந்த வழக்கை தாம் தள்ளுபடி செய்வதாக அந்த வழக்கை விசாரித்த மாவட்ட நீதிபதி ஒருவர் தெரிவித்துள்ளார்.

சர்வதேச சட்டங்களை மீறியதாக தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த வழக்கில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் மிகவும் அதிர்ச்சையை தருவனவாக இருப்பதால், இந்த நடவடிக்கைகளை தான் சாதாரணமானவையாக எடுத்துக்கொள்ள முடியவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

தாம் மனித உரிமைகளை மீறியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுக்களை இலங்கை அரசாங்கம் வன்மையாக மறுப்பதாக வாசிங்டனில் உள்ள சிறிலங்கா தூதரகம் கூறியுள்ளது.

கடந்த மாதத்தில் சிறிலங்காவின் ஒரு முன்னாள் மூத்த இராணுவ தளபதியான சவேந்திர சில்வாவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட ஒரு சிவில் வழக்கும், அவருக்கு சட்ட விலக்கு இருப்பதாகக் கூறி நிராகரிக்கப்பட்டது.

அவர் தற்போது ஐநாவுக்கான சிறிலங்காவின் துணைத்தூதுவராக இருக்கிறார்.

மாலத் தீவிலும் தமிழக மீனவர் கைது
சர்வதேச கடல் எல்லையை மீறி தங்கள் கடல் எல்லையில் புகுந்ததாக தமிழக மீனவர்கள் 11 பேரை மாலத் தீவு கடலோரக் காவற்படையினர் கைது செய்திருக்கின்றனர்.

ஆனால் அவர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாகவும், விசாரணைக்குப் பிறகு விடுவிக்கப்பட்டுவிடுவர் என்றும் கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகம் கூறுகிறது.

இவர்கள், இரவிபுத்தேன்துறையை, முள்ளுத்துறை ஆகிய மீனவ கிராமங்களைச் சேர்ந்தவர்கள் ஒரு மீன் பிடி படகில் கடந்த 23ம் தேதி மீன் பிடிக்கச் சென்றதாகவும், இரண்டு நாட்களில் கரைக்குத் திரும்பவேண்டியவர்கள் அவ்வாறு திரும்பாத நிலையில் மாலத்தீவு கடலோரக் காவற்படையினரிடமிருந்து படகின் உரிமையாளரின் மனைவிக்கு கன்னியாகுமரி மீன்வர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வந்ததாக துத்தூர் பஞ்சாயத்துத் தலைவரான ஜான் அலோஸியஸ் கூறுகிறார்.

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் எஸ்.நாகராஜன், ”மீனவர்கள் மாலத்தீவில் தடுத்துவைக்கப்பட்டுள்ள செய்தி மாநில அரசிற்கு தெரிவிக்கப்பட்டிருக்கிறது, மத்திய அரசுக்கும் தெரியப்படுத்தப்பட்டிருக்கும, மீனவர்களை விடுவிக்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவிடும்” என்றார்.

மேலும் அவர், மாவட்ட நிர்வாகத்திற்கு கிடைத்துள்ள தகவல்படி மாலத்தீவில் குமரி மீனவர்கள் பாதுகாப்பாகவே இருக்கிறார்கள், கடல் எல்லையைத் தாண்டும்போது வழமையாக அத்தகைய சம்பவங்கள் நிகழத்தான் செய்யும், தவறுதலாக எல்லை கடந்திருக்கிறார்கள் என்பதை விசாரித்து உறுதி செய்துகொண்டு, பிறகு அவர்களை விடுதலை செய்துவிடுவார்கள் என தெரிவித்தார்.

தமிழர் ஒருங்கிணைப்பு குழுவால் சீமான், சத்தியராஜ் புறக்கணிக்கப்பட்டனர்.
ஜநா மனிவுரிமை சபையின் கூட்டத்தொடரின் 19வது கூட்டம் நடைபெறும் பொழுது ஜநா முன்றலில் புலம்பெயர் தமிழ் மக்களை சகல பேதங்களையும் மறந்து ஒன்றுகூடுமாறு செந்தமிழன் சீமானும் நடிகர் சத்தியராயும் வேண்டுகோள்விடுத்திருந்தனர். மற்றய தலைவர்களை போன்று நீதிக்கான நடைப்பயணங்களில் குறிப்பிட்ட ஒரு நடைபப்பயணத்தில் ஈடுபட்டோருக்கு மட்டும் ஆதரவு தெரிவிக்காமல் இவர்கள் பொதுவாக வேண்டுகோள்விடுத்திருந்தனர்.

தமிழர் ஒருங்கிணைப்பு குழுவின் பிரான்ஸ் கிளையால் ஒழுங்குசெய்யப்பட்டுள்ள நடைப்பயணத்தை குறிப்பிடாமல் இவர்களது வேண்டுகோள் இருந்ததால் பதிவு மற்றும் நடைப்பயண பிரத்தியேக இணையத்தளம் உட்பட தமிழர் ஒருங்கிணைப்பு குழுவால் நடாத்தப்படும் அனைத்து ஊடகங்களாலும் சீமான் மற்றும் சத்தியராஜின் வேண்டுகோள்கள் பறக்கணிக்கப்பட்டதாக உள்ளக செய்திகள் தெரிவிக்கின்றன.

உச்சிதனை முகந்தால் திரைப்படத்தில் நடித்திருந்த நடிகை சங்கீதா தமக்கு ஆதரவு வழங்காததால் சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்பு குழு நடிகை சங்கீதாவை துரோகி என கடந்த புத்தாண்டில் அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்.

தமிழர்கள் அனைவரும் ஜெனீவா நோக்கி அணிதிரள்வோம்.. செந்தமிழன் சீமான் அழைப்பு.

ஒற்றைக் குடையின் கீழ் தமிழர்களின் தாகம் தமிழீழத் தாயகம் என ஐ.நா முன்றலில் அணிதிரளுமாறு நடிகர் சத்யராஜ் அழைப்பு